சேவைகள்
இளம் வயதிலேயே சமூக சேவையில் ஈடுபாடு
டாக்டர் மாயாஜி அவர்கள் ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே கரகம் ஆடி வெற்றி பெற்று, பரிசாகக் கிடைத்த தொகையை தான் படித்த பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினார்.
அந்தப் பரிசுத் தொகையை தான் படித்த பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக வழங்கி, சிறு வயதிலேயே கல்வி வளர்ச்சிக்கும் சமூக நலனுக்கும் தனது பங்களிப்பை அளித்தார்.
இவ்வளவு இளம் வயதிலேயே சமூக சேவை செய்யும் எண்ணம் அவருடைய உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது.
அன்றே தொடங்கிய பொதுநலச் சிந்தனை, இன்று வரை அவரது ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்து வருகிறது.
2011–2016 மாவட்ட கவுன்சிலர் மக்கள் பணி
2011 முதல் 2016 வரை நாகப்பட்டினம் மாவட்ட கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசாங்கத்தின் நிதியையும் தனது சொந்த நிதியையும் பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பல்வேறு நல்ல திட்டங்களை செவ்வனே செயல்படுத்தினார்.
டாக்டர் மாயாஜி அவர்கள் தொலைத்தொடர்பு உரிமைக்கான போராட்டம்
1993ஆம் ஆண்டு உள்ளூர் மக்களுக்கு தொலைத்தொடர்பு சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அரசின் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தொலைத்தொடர்பு வசதியைப் பெற்றுத் தர டாக்டர் மாயாஜி தொடர்ந்து முயற்சி செய்து போராடினார்.
மேலும் அறிய
டாக்டர் மாயாஜி அவர்களின் கல்வி மற்றும் மாணவர் நலப்பணிகள்
கல்வி மற்றும் மாணவர் நலனுக்காக பல்வேறு உதவிகளையும், கல்வி வாய்ப்புகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
மேலும் அறிய
சுனாமி பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவிக்கரம்
சுனாமி பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்கும் வகையில், அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, நிவாரண உதவிகளை மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஆதரவாக இருந்தார்.
மேலும் அறிய
இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் சேவையில் டாக்டர் மாயாஜி
இந்தியாவிலேயே முதன் முதலில் பொது மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்கள் சேவைக்கு வழிவகுத்தவர்.
மேலும் அறிய
உணவு சேவையில் டாக்டர் மாயாஜி
இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சேவா ரத்னா டாக்டர். எம்.மாயாவெங்கடேசன் அவர்கள்.
மேலும் அறிய
இலவச ஆடு, மாடு, கோழி வழங்கும் சேவையில் டாக்டர் மாயாஜி
இந்தியாவிலேயே பொதுமக்களுக்கு இலவச ஆடு, மாடு, கோழிவளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி பொது மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்தவர்.
மேலும் அறிய
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இலவச வீடு கட்டுமான சேவையில் டாக்டர் மாயாஜி
இந்தியாவிலேயே ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீடு கட்ட தேவையான பொருட்கள் மற்றும் கட்டுமான சேவைகளை வழங்கி, பாதுகாப்பான குடியிருப்பு வசதி உருவாக வழிவகுத்தவர்.
மேலும் அறிய
சோலார் விளக்கு சேவையில் டாக்டர் மாயாஜி
இந்தியாவின் பல பகுதிகளில் சோலார் தெருவிளக்கு திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களுக்கு நிலையான மற்றும் மின்சாரச் சிக்கனமான வெளிச்ச வசதியை வழங்கியவர்.
மேலும் அறிய
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல்
மாற்றுத்திறனாளிகளின் சுயசார்பு மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில், அவர்களின் அன்றாடப் பயணங்களுக்கு உதவும் மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்.
மேலும் அறிய
சுயதொழில் முன்னேற்றத்தில் டாக்டர். மாயாஜி
இந்தியாவிலேயே ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இலவச தையல் இயந்திரங்கள், அயர்ன் பாக்ஸ்கள் மற்றும் மாவு அரைக்கும் இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய உபகரணங்களை வழங்கி, சுயதொழில் தொடங்கவும் குடும்ப வருமானத்தை உயர்த்தவும் டாக்டர் மாயாஜி துணை நின்றார்.
மேலும் அறிய
கோவில் திருப்பணிகளில் டாக்டர் மாயாஜியின் பங்களிப்பு
டாக்டர் மாயாஜி அவர்கள் கோவில் திருப்பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று, ஆன்மீகப் பணிகளுக்கும் கோவில் வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை வழங்கினார். கோவில்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் பங்கேற்று, இறைத் தொண்டாற்றினார். ஆன்மீக மரபுகளையும் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்கும் நோக்கில் தனது சேவைகளை வழங்கினார்.
மேலும் அறிய
நீர்நிலைகள் பாதுகாப்பில் டாக்டர் மாயாஜியின் பங்களிப்பு
ஏரி, குளங்களைத் தூர்வாரி, நீர்சேமிப்பை மேம்படுத்தி, விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நீர்வளத்தைப் பாதுகாக்க டாக்டர் மாயாஜி பங்களித்தார்.
மேலும் அறிய
விவசாயிகளின் உற்ற நண்பன் – டாக்டர் மாயாஜி
விவசாயிகளின் நலனுக்காக இலவச ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் வேளாண் பொருட்களை வழங்கி, விவசாய வளர்ச்சிக்கும் விவசாயக் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் டாக்டர் மாயாஜி துணை நின்றார்.
மேலும் அறிய
ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டிய டாக்டர் மாயாஜி
கணவரை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பிற்காக மாதந்தோறும் 30 கிலோ இலவச அரிசி வழங்கும் முன்னோடி திட்டத்தை முன்னெடுத்தார்.
மேலும் அறிய
ஏழை மக்களின் உயிர் காக்கும் மருத்துவ உதவிகள்
மருத்துவப் பொருட்களை வாங்க முடியாத ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்கி, அவர்களின் சிகிச்சை தடையின்றி தொடர உதவினார்.
மேலும் அறிய
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உற்ற துணையாக டாக்டர் மாயாஜி
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் வீடுகளுக்கே சென்று உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவினார்.
மேலும் அறிய
இலவச மகப்பேறு மருத்துவமனை மூலம் தாய்மைப் பாதுகாப்பு
ஏழை எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு தரமான இலவச மருத்துவ வசதிகள் கிடைக்கவும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும் இம்முயற்சிக்கு பங்களித்தார்.
மேலும் அறிய
அதிநவீன இலவச இறப்பு குளிர்சாதன பெட்டி வழங்கும் சேவையில் டாக்டர் மாயாஜி
இந்தியாவிலேயே பொது மக்களுக்கு அதிநவீன இலவச இறப்பு குளிர்சாதன பெட்டி முதன்முதலில் பொதுமக்களுக்கு வழங்கியவர்.
மேலும் அறிய
மக்கள் பாதுகாப்பு சேவை மக்களின் பாதுகாப்பிற்காக CCTV கேமராக்கள் அமைத்து வழங்கிய டாக்டர் மாயாஜி
பொதுமக்களின் பாதுகாப்பையும் சமூக நலனையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு பகுதிகளில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வழங்கப்பட்டன..
மேலும் அறிய
மக்களுக்காக களத்தில் வெற்றியடைந்த ஆர்ப்பாட்டங்கள் சேவையில் டாக்டர் மாயாஜி
மக்களின் உரிமை மற்றும் நலனுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களை குறிக்கும். இந்த போராட்டங்கள் மக்களின் ஒற்றுமை மற்றும் முயற்சியால் வெற்றி பெற்றன. இதன் மூலம் சமூக நீதியும் மக்கள் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.
மேலும் அறிய