டாக்டர் மாயாஜி அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுமார் 50,000 குடும்பங்களுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி வருகிறார்.
பொங்கல் வைப்பதற்குத் தேவையான அரிசி, நெய், வெல்லம், இலை, கரும்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்களைத் தொகுப்பாக வழங்கி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில் மக்களின் நலனில் அக்கறை கொண்டு கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து வழங்கி வரும் இந்த நலத்திட்ட உதவி இன்றும் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.