2006 ஆம் ஆண்டு சுனாமியின் சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த மக்களுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்காக மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி உயர்திரு. மோகன் அவர்களால் டாக்டர் பட்டமும் மேலும் நீதிபதி உயர்திரு. வள்ளிநாயகம் அவர்களால் பாரத சேவா ரத்னா மற்றும் பாரத் கௌரவ் பட்டமும் பெற்றுள்ளார்
டாக்டர் மாயாஜி அவர்கள் சுனாமி பேரலை தாக்கியபோது கடற்கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்து, அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உறுதுணையாக நின்றார்.
சுமார் 1,000 குடும்பங்களுக்கு இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உறுதுணையாக இருந்து மறுவாழ்வுக்கு வழிவகுத்தார்.