டாக்டர் மாயா வெங்கடேசன் கொள்கைகள் | திராவிட மக்கள் கட்சி
30 Years of Integrity

டாக்டர் எம். மாயா வெங்கடேசன்

மக்களின் தேவைகளை உணர்ந்து பணியாற்றும் மயிலாடுதுறையின் நம்பிக்கை நட்சத்திரம்.

டாக்டர் எம். மாயா வெங்கடேசன்
பிறப்பு மற்றும் பின்னணி

14.04.1972 அன்று செம்பனார்கோயில் பகுதியில் திரு. மணிவண்ணன் மற்றும் திருமதி. வசந்தா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

இளம் வயதிலேயே சமூக சேவையில் ஈடுபாடு

சிறு வயதிலேயே உருவான பொதுநலச் சிந்தனை

டாக்டர் மாயாஜி அவர்கள் ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே சமூக சேவையில் ஈடுபடத் தொடங்கினார். கரகம் ஆடி வெற்றி பெற்று, பரிசாகக் கிடைத்த தொகையை தான் படித்த பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினார்.

அந்தப் பரிசுத் தொகையை தான் படித்த பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக வழங்கி, சிறு வயதிலேயே கல்வி வளர்ச்சிக்கும் சமூக நலனுக்கும் தனது பங்களிப்பை அளித்தார்.

மற்றவர்களின் தேவையை உணர்ந்து உதவ வேண்டும் என்ற எண்ணம், அவருடைய இளம் வயதிலேயே உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியது. அந்த ஆரம்பகால பொதுநலச் சிந்தனையே, பின்னாளில் மக்களுக்கான பல்வேறு சமூக நலப்பணிகளில் தொடர்ந்து செயல்பட அவருக்கு ஊக்கமாக அமைந்தது.

அன்றே தொடங்கிய பொதுநலச் சிந்தனை, இன்று வரை அவரது ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்து வருகிறது.

2011–2016 மாவட்ட கவுன்சிலர் மக்கள் பணி

2011 முதல் 2016 வரை நாகப்பட்டினம் மாவட்ட கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசாங்கத்தின் நிதியையும் தனது சொந்த நிதியையும் பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பல்வேறு நல்ல திட்டங்களை செவ்வனே செயல்படுத்தினார்.

கல்விப் புரட்சி பணிகள்

ஆவூரில் புதிய பள்ளிக்கூடம் கட்டி கல்வி கட்டமைப்பை உருவாக்கியது.

செம்பனார்கோவிலில் 1000+ மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியது.

ஆக்கூர் மற்றும் பூம்புகார் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ் வழங்கியது.

விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு சீருடை வழங்கியது.

சமூக நலப் பணிகள்

80 லட்சம் மதிப்பில் மாபெரும் மருத்துவ முகாம் - ஆயிரக்கணக்கானோர் பலன்.

ஆண்டுதோறும் கண் சிகிச்சை முகாம் - 3000 பேருக்கு இலவச கண்ணாடிகள்.

50,000 பேருக்கு அரிசி வழங்கி பசியற்ற சமுதாயம் படைத்தல்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம்.

30+ ஆண்டுகள் மக்கள் சேவை
1000s பயனாளிகள்
24/7 சேவைகள்

"மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே எமது அரசியலின் முதல் கடமை."

- டாக்டர் எம். மாயா வெங்கடேசன்